Friday, September 18, 2009

காதலா.. அப்டின்னா....? - Part - 02

வணக்கம் உறவுகளே...
மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

இதற்கு முந்திய பதிவில் ,என் வாழ்வில் வந்த் இரண்டாம் அவள் அனுப்பிய மின்னஞ்சலின் ஒரு பகுதியை தந்து இருந்தேன்..அதில் அவள் எங்களுக்குள் இருக்கும் உறவு என்ன என்று கேட்டு எழுதி இருந்தாள்..அதை வாசித்த அனைவரிற்கும் புரிந்து இருக்கும்,அவள் என்னை காதலித்ததும் அதை தான் சொல்ல தயங்கியதும்..என்னை தான் முதலில் காதலை வெளிப்படுதணும் என்றும் ஏழுதி இருந்தாள்.ஆனால் நானும் அவளுடய கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல இல்லை.எனக்கு அந்த நேரம் அவளுடைய உறவு தேவைப்பட்டது..எனக்கு காதல் என்று சொல்ல எல்லாம் பயம்..என்னை பொறுத்த வரை அப்போ காதல் என்று ஒரு பெண்ணிடம் சொன்னால் , எந்த எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்க கூடாது .அதனால் நன அவளிடம் கெட்டு அன்ப்பினேன் எங்களுக்குள் இருக்கும் உறவு காதல் என்றால் அது வெற்றி பெறுமா என்ன அதுக்கு அவள் அனுப்பிய மினன்ஞ்சலை படியுங்கள்
"ok, நீங்க கேட்ட கேள்விக்கு வருகிறேன், அதாவது எங்க relationship love என்றால் அது success ஆகும? ம்ம்ம்ம்... இருவரும் உண்மாயான lovers என்றால், ஒருத்தர் மேல் ஒருத்தர் உண்மையான அன்பு, பாசம் இருந்தால் நிச்சயமா அது வெற்றி பெறும்... அது நம்ம கையில் தான் இருக்குது. நீங்க distance பற்றி யோசிக்குறீங்க என்று நினைக்குறேன், உண்மயான love இட்கு "டிஸ்டன்கே" உண்டா? "சொ" நம்பிக்கை இருந்தால் முடியும். நீங்க என்ன நினைக்குறீங்க?" அ க்வெஸ்டியோன்:" உங்கட அம்மா, அப்பா நீங்க அப்படி ஏதாவது "லொவே" பண்ணினால் சம்மதிப்பினமா? கல்யாணம் பண்ணி வைப்பினமா?"

என்னை அவள் உயிராய் காதலிப்பது போலல்லவா இருக்கு..ம்ம்.. நான் அவளின் எந்த கேள்விக்குமே நேரடியாக பதில் அளித்தது கிடையாது.(என்னில் ஒரு பழக்கம் இருக்கிறது எதையும் சொல்ல அல்லது செய்ய முதல் நன்றாக யோசித்து விட்டே செய்வேன்.)

காதல் என்று இல்லாமல் எமக்குள் இருந்த உறவு அப்படியே தொடர்ந்தது.ஒரு சில மாதங்களிற்க்கு பிறகு அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்த்தது..அதை வாசித்த போது நான் இடிந்து போனேன்.அதில் அவள் தனக்கு வீட்டில் மாப்பிளை பார்த்துட்டார்களாம்,தனக்கு தெரியாமலே எல்லாம் நடந்துட்டுதாம்..அதனால் தன்னால் இனி எதுவும் செய்ய முடியாது என்று எழுதி இருந்தாள்..எனக்கோ எதுவுமே புரியல..அவளையும் என்னால் புரிந்து கொள்ளவே முடியல.இருந்தாலும் அவள் எனக்கு தந்த வலி நீண்ட நாட்கள் இருக்கல.


அவளின் பிரிவின் பின்னர் சில காலம் கடந்த பின் என் வாழ்க்கையில் அடுத்த பெண் வந்தாள்..என்னுடைய நண்பனிற்கு உறவினர் அவள்.அவளின் பெயரை "சுதா" என்று வைத்து கொள்வோம்.சுதா அழகானவள் பயந்த சுபாவம் உள்ள ஒரு பெண்..ப்ழைய கதை போலவே இவளுடனும் நாட்கள் செல்ல செல்ல எமக்குள் இருந்த உறவின் நெருக்கம் இறுக்கமானது.எமது நெருக்கம் உடல் உறவு பற்றி கதைப்பது.கதைப்பதன் மூலமே ஒருவர் ஒருவரை திருப்தி படுத்தி கொள்வதும் ஆக போய்க் கொண்டிருந்தது.ஆனால் இருவரும் ஒரு விடயத்தில் தெளிவாக இருந்தோம் அதாவது நாங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் பிரிந்தே ஆகணும் என்று.ஏனேனில் சாதி ..!! இருந்தாலும் நாங்கள் அதற்காக எமக்குள் இருந்த நெருக்கத்தை , அன்பை குறைததும் இல்லை.எனக்கு அவளில் ஒரு தனி மரியாதை இருந்தது.இப்போ கூட இருக்கிறது.அவளுக்கு முதல் முதல் கிடைத்த நண்பன் நான்.அவளுடைய பயந்த சுபாவம் ,அடக்கம் என்பன எனக்கு அவள் மேல் இருந்த அதிக அன்புக்கு காரணமாயின.அவளும் என் மேல் அன்பு வைத்து இருந்தாள்.நாங்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்த போதிலும் நாங்கள் ஒரு சில நிமிடங்கள் தனிமையில் இருந்து இருக்கோம்..ம்ம் எனக்கு இப்பவும் நினைவு இருக்கிறது..நாம் இருவரும் முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் கடற்கரைக்கு சென்றொம்.அங்கு வைத்தே நான் முதல் முதல் அவளுக்கு முத்தம் கொடுத்தேன்..அதுதான் நான் வாழ்கையில் நான் கொடுத்த முதல் முத்தம் ஒரு பெண்ணிற்கு.

உறவுகளே இப்போ நேரம் அதிகாலை இரண்டு மணி ஆகிறது..நாளை வேலைக்கும் போயாகணும்..அதனால் இப்போ இத்துடன் நிறுத்தி மீதி அய் நாளை தொடர்கிறேன்.
நன்றி

8 comments:

  1. ஒருவருக்கு இத்தனை காதல் வருமா சகோதரா??? உண்மை பொய் அன்புக்கு கிடையாது..அன்பு என்பது எதிர் பார்பற்றதாக இருக்க வேண்டும்... ஏனோ உங்களை போன்ற ஆண்களும் பெண்களும் உண்மையான காதல் என்று சொல்லி சொல்லியே.... காதலின் ஆழத்தை கெடுக்கிரிர்கள்.. இருந்தாலும் உங்கள் ...எழுத்து நன்றாக உள்ளது..இதன் மூன்றாம் பகுதி படிக்க ஆவாலாய் உள்ளேன் ...

    நான் ஜெனித்தா

    ReplyDelete
  2. அன்பு சகோதரி ஜெனித்தாவே... நான் இதுவரை சொன்னவர்களில் எவரையும் காதலிக்க வில்லை. அவர்களில் எனக்கு அன்பும் இருந்தது. ஆனால் அதை நானோ அவர்களோ காதல் என்று சொல்லவும் இல்லை..ஆனால் எங்களுக்குள் காமம் இருந்தது.நான் இந்த பதிவு எழுத தொடங்கியதே என் காதலை பற்றி சொல்ல தான்..எனக்கு இன்னும் புரியவில்லை ஜெனித்தா உண்மை காதல் என்றால் என்ன என்று....? நீங்கள்(பெண்கள்) காதலிப்பீர்கள் பிறகு வெறு ஒருவனை கட்டிக்கொண்டு எமக்கு அல்வா கொடுத்த பின்பும் நாங்கள் எம் காதல் வாழ்க,காதலி வாழ்க என்று வாழ்த்தி கொண்டு இருப்பதுவா உண்மை காதல்...!!

    ReplyDelete
  3. unmaija unkala oru girl love pannina; awal unkala widdudu wera jarajum kalijanam kadda madda, oruwela santarpam sulnilajala kalijanam kaddinalum awawala santosama iruka elatu. unkala life mulukka marakkawum elatu.

    ReplyDelete
  4. நன்றி ஹஸ்மி ..தொடர்ந்து என் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்..அதன் பின் சொல்லுங்கள் என் காதல் உண்மையானதா ? இல்லையா என்று?

    ReplyDelete
  5. நண்பா, நீங்கள் சுதாவிடம் காம உறவே வைத்துள்ளீர்கள் அதுவும் நண்பன் என்ற போர்வையில், நீங்கள் சுதாவிடம் அன்பு வைத்திருப்பது என்று சொல்லி இருக்கிறீர்கள், அது அன்பு இல்லை ஆசை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
  6. unmayana kadhal irunthal yaralum yarayum marakka ealathu. unkalala kuda ippa avavai marakka mudiyalai thane. unmayana love ellam success aakum endu 100% solla ealathu. bt yar eppidi innoruthanai wedding panninalum kadaisi varai unmayana love endal marakka ealathu. appidi iruntha athu than love

    ReplyDelete