
வணக்கம் நண்பர்களே
தமிழர்களிற்கு வலிகளையும்,வேதனைகளையும் மட்டுமே தந்த இந்த பாழப்போன 2009 ஒழிந்து போகட்டும்.வரும் 2010 ஆவது தமிழர்களிற்கு நன்மை தரும் ஆண்டாக அமையாதோ என்ற ஏக்கத்துடன் என் தொடர் பதிவை தொடர்கிறேன்.
2009 என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல வலிகளை தந்த ஆண்டாகாவே அமைந்தது.என் உயிர் உள்ளவரை மறக்க முடியாத சோகங்களை என்னிடம் விட்டுவிட்டு பிரிகிறது 2009 . மலரும் புதிய 2010 கூட சோகங்களுடன் தான் என்னை வரவேற்கிறது.எல்லாவற்றிகும் ஒரே ஒரே காரணம் 'காதல் காதல்' ...
என்னுடைய 3 வது பதிவில் ஷானிக்கா என்னிடம் தன் காதலை சொன்னதாக சொல்லி இருந்தேன்..நான் அவளிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை.அவளை காதலிக்கும் எண்ணம் எனக்கு ஒரு துளி கூட இருந்ததில்லை.அப்படி இருக்க அவள் என் முடிவையும் கேட்டாள்..எனக்கோ என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை..கொஞ்ச நாட்களாக அவளின் இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதை தவிர்த்து வந்தேன்..ஏன் என்றால் என்னுடைய அகராதியில் காதல் என்று சொல்லிவிட்டால் கடைசிவரை கைவிடகூடாது என்ற மூட நம்பிக்கை இருந்தது.அதைவிட ஷாநிக்காவின் காதலை ஏற்று கொள்ள சில விடயங்கள் எனக்கு தடையாக இருந்தது..
முதலாவது என்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருக்ககூடாது என் அப்போதைய விருப்பமாக இருந்தது.
இரண்டாவது எனக்கு மனைவியாக வருபவளுக்கு காதல் என்பது இருந்து இருக்ககூடாது.ஷானிக்கா இற்கு அவளுடைய பதினாறு வயதில் காதல் ஒன்று இருந்து அவளுடைய பெற்றோரின் எதிர்ப்பால் அது பிரிந்து போனது .இதை ஷானிக்காவே என்னிடம் சொல்லி வேதனைப்பட்டு இருக்கிறாள் .
இப்படிப்பட சூழ்நிலையில் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குள் குழப்பம் அவளும் என்னை விட்டது இல்லை.
ஒரு நாள் நான் அவளிடம் நான் சொன்னேன்
ஓகே.. உன் காதலை நான் ஏற்று கொள்கிறேன் ,நான் சில கேள்விகள் கேட்பேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என ..அவளும் அதற்கு உடன் பட்டாள்.
என்னுடைய முதலாவது கேள்வி , உன்னுடைய முதலாவது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் இந்த காதலை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வினம்?
அதற்கு அவளின் பதில், அப்போ எனக்கு காதல் , கல்யாணம் என்றால் எல்லாம் தெரியாது ,ஏதோ அவன் என் பின்னால் சுற்றினான் , நான் சொல்கிறமாதிரி எல்லாம் நடந்தான் , என்னை மதித்தான் எனக்கு அது பிடித்து இருந்தது தவிர நான் அவனை கல்யாணம் செய்வது மாதிரி கூட நினைத்து பார்த்ததில்லை அப்படிப்பட்ட வயசில் எந்த பெற்றோரும் காதலை ஏற்று கொள்ள மாடினம் தானே .அவனுடைய குடும்ப பின்னணி கூட எங்க குடும்பத்துக்கு ஏற்றதாக இருக்கவில்லை .அனால் உன்னுடைய குடும்பம் கண்டிப்பாக என்னுடைய பெற்றோருக்கு பிடிக்கும் .
என் அடுத்த கேள்வி ..உன்னுடைய முதலாவது காதலன் திரும்பி வந்தால் என்ன செய்வாய்?
ஷனிக்கா - இது தேவை இல்லாத கேள்வி என நினைக்கிறன் ரொஷான்..
நான் - இல்லை plz பதில் சொல்லேன்
ஷானிக்கா- இல்லைடா அவன் வரமாட்டான் , அவனுக்கு என் பெற்றோர் மீது கோபம் , அவனும் நானும் கதைத்து கூட எவ்வளவோ காலமாகுது .
நான் - இல்லை ஷானிக்கா என் கேள்விற்கு மட்டும் பதில் சொல்
ஷானிக்கா - இல்லை வர மாட்டான் டா ..என்னை நம்படா ..அப்படி வந்தாலும் நான் ஏற்றுகொள்ள மாட்டேன்.
என்னால் அவளின் காதலை நிராகரித்துவிட்டு அவளிடம் இருந்து பிரிந்து செல்லவும் என் மனம் இடம் கொடுக்கவில்லை , நானும் காதலிக்கிறேன் என்று பொய்க்கு தன்னும் சொல்லவும் முடியவில்லை.அவளின் மனதை நோகடிக்காமல் என்னால் அன்று சொல்ல முடிந்தது இது மட்டும் தான் அதாவது என்னுடைய உழைப்பில் எப்போ என்னால் தனித்து நிற்கின்ற நாளிலும் நீ என்னை காதலித்து கொண்டிருந்தால் கண்டிப்பாக நான் உன்னை ஏற்று கொள்வேன்.
நான் ஷாநிக்காவை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே விரும்பினேன் .ஆனால் அவளோ என்னை சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தாள் .அதற்கான சந்தர்ப்பத்தையும் அவளே உருவாக்கினாள்.ஆம் ,அவள் தனது கல்லூரி வளாக விடுதி இல் இருந்து தலைநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வரப்போவதாகவும் ..இரவுப்பொழுதில் தான் தலைநகரை வந்தடைவேன் என்றும்.தன்னை தலை நகர பேருந்து நிலையத்தில் இருந்து உறவினர் வீடிற்கு அழைத்து செல்லும் படியும் கேட்டாள்.நானும் வேறு வழி இன்றி சம்மதித்தேன்.
எங்களுடைய முதல் சந்திப்பு பற்றி அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளகிறேன் ..
மீண்டும் மலர்கின்ற இந்த புத்தாண்டு என்னை போல் அல்லாது உங்கள் எல்லார் வாழ்க்கையிலும் அமைதி ஐ தரவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்