Friday, January 1, 2010

காதலா அப்டின்னா ? பகுதி - 04














வணக்கம் நண்பர்களே
தமிழர்களிற்கு வலிகளையும்,வேதனைகளையும் மட்டுமே தந்த இந்த பாழப்போன 2009 ஒழிந்து போகட்டும்.வரும் 2010 ஆவது தமிழர்களிற்கு நன்மை தரும் ஆண்டாக அமையாதோ என்ற ஏக்கத்துடன் என் தொடர் பதிவை தொடர்கிறேன்.
2009 என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல வலிகளை தந்த ஆண்டாகாவே அமைந்தது.என் உயிர் உள்ளவரை மறக்க முடியாத சோகங்களை என்னிடம் விட்டுவிட்டு பிரிகிறது 2009 . மலரும் புதிய 2010 கூட சோகங்களுடன் தான் என்னை வரவேற்கிறது.எல்லாவற்றிகும் ஒரே ஒரே காரணம் 'காதல் காதல்' ...

என்னுடைய 3 வது பதிவில் ஷானிக்கா என்னிடம் தன் காதலை சொன்னதாக சொல்லி இருந்தேன்..நான் அவளிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை.அவளை காதலிக்கும் எண்ணம் எனக்கு ஒரு துளி கூட இருந்ததில்லை.அப்படி இருக்க அவள் என் முடிவையும் கேட்டாள்..எனக்கோ என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை..கொஞ்ச நாட்களாக அவளின் இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதை தவிர்த்து வந்தேன்..ஏன் என்றால் என்னுடைய அகராதியில் காதல் என்று சொல்லிவிட்டால் கடைசிவரை கைவிடகூடாது என்ற மூட நம்பிக்கை இருந்தது.அதைவிட ஷாநிக்காவின் காதலை ஏற்று கொள்ள சில விடயங்கள் எனக்கு தடையாக இருந்தது..
முதலாவது என்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருக்ககூடாது என் அப்போதைய விருப்பமாக இருந்தது.
இரண்டாவது எனக்கு மனைவியாக வருபவளுக்கு காதல் என்பது இருந்து இருக்ககூடாது.ஷானிக்கா இற்கு அவளுடைய பதினாறு வயதில் காதல் ஒன்று இருந்து அவளுடைய பெற்றோரின் எதிர்ப்பால் அது பிரிந்து போனது .இதை ஷானிக்காவே என்னிடம் சொல்லி வேதனைப்பட்டு இருக்கிறாள் .
இப்படிப்பட சூழ்நிலையில் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குள் குழப்பம் அவளும் என்னை விட்டது இல்லை.
ஒரு நாள் நான் அவளிடம் நான் சொன்னேன்
ஓகே.. உன் காதலை நான் ஏற்று கொள்கிறேன் ,நான் சில கேள்விகள் கேட்பேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என ..அவளும் அதற்கு உடன் பட்டாள்.
என்னுடைய முதலாவது கேள்வி , உன்னுடைய முதலாவது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் இந்த காதலை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வினம்?
அதற்கு அவளின் பதில், அப்போ எனக்கு காதல் , கல்யாணம் என்றால் எல்லாம் தெரியாது ,ஏதோ அவன் என் பின்னால் சுற்றினான் , நான் சொல்கிறமாதிரி எல்லாம் நடந்தான் , என்னை மதித்தான் எனக்கு அது பிடித்து இருந்தது தவிர நான் அவனை கல்யாணம் செய்வது மாதிரி கூட நினைத்து பார்த்ததில்லை அப்படிப்பட்ட வயசில் எந்த பெற்றோரும் காதலை ஏற்று கொள்ள மாடினம் தானே .அவனுடைய குடும்ப பின்னணி கூட எங்க குடும்பத்துக்கு ஏற்றதாக இருக்கவில்லை .அனால் உன்னுடைய குடும்பம் கண்டிப்பாக என்னுடைய பெற்றோருக்கு பிடிக்கும் .

என் அடுத்த கேள்வி ..உன்னுடைய முதலாவது காதலன் திரும்பி வந்தால் என்ன செய்வாய்?
ஷனிக்கா - இது தேவை இல்லாத கேள்வி என நினைக்கிறன் ரொஷான்..
நான் - இல்லை plz பதில் சொல்லேன்
ஷானிக்கா- இல்லைடா அவன் வரமாட்டான் , அவனுக்கு என் பெற்றோர் மீது கோபம் , அவனும் நானும் கதைத்து கூட எவ்வளவோ காலமாகுது .
நான் - இல்லை ஷானிக்கா என் கேள்விற்கு மட்டும் பதில் சொல்
ஷானிக்கா - இல்லை வர மாட்டான் டா ..என்னை நம்படா ..அப்படி வந்தாலும் நான் ஏற்றுகொள்ள மாட்டேன்.

என்னால் அவளின் காதலை நிராகரித்துவிட்டு அவளிடம் இருந்து பிரிந்து செல்லவும் என் மனம் இடம் கொடுக்கவில்லை , நானும் காதலிக்கிறேன் என்று பொய்க்கு தன்னும் சொல்லவும் முடியவில்லை.அவளின் மனதை நோகடிக்காமல் என்னால் அன்று சொல்ல முடிந்தது இது மட்டும் தான் அதாவது என்னுடைய உழைப்பில் எப்போ என்னால் தனித்து நிற்கின்ற நாளிலும் நீ என்னை காதலித்து கொண்டிருந்தால் கண்டிப்பாக நான் உன்னை ஏற்று கொள்வேன்.

நான் ஷாநிக்காவை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே விரும்பினேன் .ஆனால் அவளோ என்னை சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தாள் .அதற்கான சந்தர்ப்பத்தையும் அவளே உருவாக்கினாள்.ஆம் ,அவள் தனது கல்லூரி வளாக விடுதி இல் இருந்து தலைநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வரப்போவதாகவும் ..இரவுப்பொழுதில் தான் தலைநகரை வந்தடைவேன் என்றும்.தன்னை தலை நகர பேருந்து நிலையத்தில் இருந்து உறவினர் வீடிற்கு அழைத்து செல்லும் படியும் கேட்டாள்.நானும் வேறு வழி இன்றி சம்மதித்தேன்.
எங்களுடைய முதல் சந்திப்பு பற்றி அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளகிறேன் ..

மீண்டும் மலர்கின்ற இந்த புத்தாண்டு என்னை போல் அல்லாது உங்கள் எல்லார் வாழ்க்கையிலும் அமைதி ஐ தரவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்

Tuesday, November 3, 2009

ஏன் இந்த கொலை வெறி ..

காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரனுக்காகாக ஒரு சிறு பதிவு..

மாசத்துக்கு ஒரு பதிவு என எழுதிக்கொண்டு இருந்த என்னை அடுத்தடுத்த நாட்களில் இரண்டு பதிவு எழுத தூண்டியது சகோதரன் பாலகிருஷ்ணன் சிவகுமாரின் படுகொலை.

வீதியில் சென்ற வாகனங்களுக்கு கல் எறிந்தார் என்ற ஒரே ஒரு குற்றதிற்க்காக என் சகோதரன் சில புத்தி ஜீவிகளினால் பம்பலப்பிட்டி கடலினுள்ளே அடித்து மூழ்கடிக்க பட்டு இருக்கிறார்.சட்டததை பேணிப்பாதுகாக்க வேண்டிய காவல்த்துறையே இந்த கொடூரத்தை முன் நின்று நடத்தி முடித்து இருகிறது.

முதலில் இந்த செய்தியை நான் இணைய தளத்தில் வாசித்த போது "பம்பலப்பிட்டியில் ஒருவர் பொதுமக்களால் அடித்து கொலை" என்று மொட்டையாவே இருந்தது.அப்போது அந்த செய்தி என்னை பெரிதாக பாதிக்கவும் இல்லை,அதை நான் கருத்தில் எடுக்கவும் இல்லை.ஆனால் பிறகு பிறகு ஒளிப்படத்துடனான செய்திகளை வாசிக்கும் போது தான் அந்த கொடூரம் புரிந்தது.படுகொலை செய்யப்பட்டவர் ஒரு மன நோயாளி..அவர் ஒரு தமிழர்..மூவர் சேர்ந்து சிவகுமாரனை கடலில் இருந்து வெளிவர விடாமல் பொல்லுகளாலே அடித்து அடித்து கொலை செய்து இருக்கிறார்கள் அந்த கொலை வெறியர்கள்.அந்த அப்பாவி சகோதரன் எவ்வளவு மன்றாடியும், கை எடுத்து கும்பிட்டும் அவன் மீது இரக்கம் வரைல்லை அந்த கொலை வெறியர்களுக்கு..ஏன் அந்த கொலை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.அவர் ஒரு தமிழ்ர் என்பதற்காக அப்படி அனாதரவாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது நம் நாட்டில் வாகனங்க்களுக்கு கல் எறிந்தால் இது தான் தண்டனையா?? இலங்கை எதை நோக்கி போய்க்கொண்டு இருக்க்றது??


அந்த சகோதரன் செய்த பாவம் தான் என்ன??

மன நோயாளியாக பிறந்தது அவன் குற்றமா?? அல்லது

தமிழனாக பிறந்தது தான் குற்றமா??

அந்த சகோதரனின் பெற்றோரின் நிலை ... பெற்றொரின் மனம் எவ்வளவு துடிக்கும்..
கடவுள் உண்மை இலையிலே இருக்கிறாரா..?

தமிழர்கள் இனி யாரை நம்பி இருப்பது.

அந்த சகோதரனின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக...

Monday, November 2, 2009

காதலா.. அப்டின்னா....? - Part - 03

வணக்கம் நண்பர்களே..
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..
இதற்க்கு முந்திய பதிவில் எனதும் சுதாவினதும் முதல் சந்திப்பு முதல் சந்திப்பு முதல் முத்ததை பற்றி எழுதி இருந்தேன்.அதன் பின்பு நான் அவளை தனிமையில் சந்திக்க சந்தர்ப்பங்கள் பெரிதாக அமையா விட்டாலும் கிடைக்கும் ஒரு சில் நிமிடங்களை நாங்கள் பயன் படுத்த தவறியது இல்லை.அப்போது எல்லாம் முத்தங்கள் பரிமாறிக் கொள்வதும்,சின்ன சின்ன உரசல்கள்,கிள்ளல்கள் எமக்குள் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு இருபீர்கள்.இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டு சென்றன.

இப்படியாக காலங்கள் கடந்து செல்லும் போது நான் எனது முதல் பதிவில் குறிப்பிட்ட எனக்கு கிடைத்த முதல் பெண் நண்பியின் மூலம் அவளின் நண்பி(ஷானிக்கா-பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன் தொலைபேசி இலக்கம் எனக்கு கிடைத்தது.நானும் அவளுடன் தொலைபேசி மூலம் கதைக்க முயற்சி செய்தபோதும் அவள் என்னுடன் கதைக்க வில்லை.நானும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தேன்.ஒரு நாள் நான் ஷானிக்கா உடன் கதைக்க முயற்சி செய்த போது அன்று சந்தர்ப்பம் கிடைதது..சரியாக இரண்டு மாதங்களுக்கு பிறகு..இப்பவும் எனக்கு எந்த நாள்,இடம்,நேரம் கூட எனக்கு நினைவு இருக்கு.நேரம் இரவு பதினொரு மணி இருக்கும், இப்போ நீங்கள் இடத்தையும் கண்டு பிடித்து இருபீங்க..ம்ம் நீங்க நினைதது சரி தான் பா, ரெஸ்ரோறன்ற் தாங்க..நண்பர்களுடன் குடித்து கொண்டு இருந்தேன்..அன்று நான் என்னுடைய தொலைபேசி யில் அழைத்த போது மறுமுனையில் ஒரு பெண் குரல்..
"Hello"
"Hello"
ஏப்படி இருகீங்க
நீங்க?
என்னை தெரியலையா?
நீங்க யாருடன் கதைக்கணும்?
உங்க Number இல்ல இருந்து எனக்கு ஒரு call வந்து இருந்தது,அது தான் நான் callபண்ணினான்..
என்னுடைய Number இல் இருந்தா..எப்போ..?
ஒரு கிழமை இற்கு முதல்..
சான்ஸே இல்லயே..
இல்லை வந்துதே ,அல்லது எனக்கு எப்படி உங்க Number தெரியும்..
இப்படி கதைத்து கொண்டு இருக்கும் போது அங்கு வேறு ஒரு பெண்ணின் குரலும் கேட்டது..
நான்.. யார் உங்களுக்கு பக்கதில் இருந்து கத்தி கொண்டு இருக்கிறது?
அது எனது மச்சாள்..
மக்சாள்?
ஆம்,எனது Husband இன் sister
எனக்கு Wedding முடிந்து நான் இப்போ என் Husband இன் வீட்ட தான் இருகென்..
அவர்?
வெளினாடு..
Please இனி call பண்ணி Disturb பண்ணவேண்டாம்..
அவருக்கு தெரிந்தால் Problem ஆகிடும்
என்று சொல்லி விட்டு என் அழைப்பை துண்டித்து விட்டாள்..

நான் முதலே ஷானிக்கா வின் நண்பி இடம் ஷானிக்காவை பற்றி கேட்டு அறிந்து விட்டேன்..அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்பது எனக்கு முதலே தெரிந்து இருந்தாலும்,நான் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ளவில்லை.இது தான் நான் அவ்ளுடன் முதல் நாள் கதைத்தது.(நான்கு வருடங்களுக்கு முன்).அடுத்த நாள் நான் ஏனோ தெரியல ஷானிக்காவுடன் கதைக்க முயற்சி செய்யல..இரண்டு , மூன்று நாள் கழித்து மீண்டும் அழைதேன்..
Hello
உங்களை அல்லோ Call பண்ண வெண்டாம் என்று சொன்னான்..
Sorry..உங்க voice ஐ கேட்கனும் போல இருந்தது ,அது தான் call பண்ணினான்..,,
Sorry.. இனி நான் call பண்ன மாட்டன்..
நீங்க யாரு..?யார் உங்களுக்கு என் Number தந்தது ஏன்று சொல்லுங்க Please.?
அதானே சொல்லிடெனே..
இல்லை..நான் என் Number இல் இருந்து யாருக்கும் call பண்ணல..
உங்க Friends யாரவது மாறி call பண்ணி இருக்கலம்..
No chance..நான் யாரிடமும் என் phone ஐ கொடுப்பதில்லை..
உங்க Name என்ன?
ரொஷன்(Roshan)..உங்க name?
நான் தெரியாத ஆட்களுக்கு எல்லாம் பேர் சொல்வதில்லை..
ம்ம்..
OKey.இப்போ என்ன செய்றீங்க..
படிக்கிறேன்..
Ok நான் வைக்கிறேன்..
ஏன்..
எதுக்காக நான் கதைக்கணும்..
ம்ம்..
Bye.
Bye..

இந்த தடவை அவள் கல்லூரி விடுதி இல் இருந்தாள்.

இப்படியே ஷானிக்காவினுடான தொடர்பு படிப்படியாக வழர்ந்து கொண்டே போனது,அதே நேரத்தில் சுதா உடன் நான் வைத்து இருந்த உறவும் தொடர்ந்தது.சுதாவும் நானும் சந்திக்க சந்தர்ப்பங்கள் அமையாத போதும்,நாங்கள் வீதிகளில் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வோம்.சுதா தான் குடும்பத்தாருடன் எங்கு போனாலும் என்னையும் அங்கு வர சொல்வாள்..அங்கே இருவரும் கண்களால் பேசி கொள்வோம்..பின் அன்று இரவு எங்கள் பார்வைகளை பற்றி தொலை பேசியில் கதைப்போம்.இப்படி தான் ஒரு நாள் சுதா குடும்பத்தாருடன் "கல்லூரி" ப்டம் பார்க்க போனாள்,என்னையும் வர சொல்லி ஆசையாக கேட்டாள்..நானும் போய்,அவள் குடும்பத்துடன் அமர்ந்து இருந்த ஆசனதிற்கு பின் இருந்து அவளை நிம்மதியாக படம் பார்க்கவே விடல..இப்படியாக சுதாவுடன் நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்க,அவளுக்கு வீட்டில் மாப்பிளை பார்த்து விட்டர்கள் என்ற செய்தி அவள் மூலமே எனக்கு தெரிய வந்துது..என்றோ ஒரு நாள் பிரிய போகிறோம் என்று தான் அவளுடன் பழகினான்..ஆனாலும் மனதின் மூலையில் ஒரு வலி,சோகம்.சுதாவிற்க்கும் அதே சோகம்..,வலி.. என்ன செய்வது..? இருந்தாலும் நாங்கள் பழைய மாதிரியே பழகி கொண்டு இருந்தோம்.

இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டு செல்ல செல்ல ,எனக்கும் ஷானிக்கா விற்குமான உறவு மிகவும் நெருக்க மடைந்தது ..ஒரு நாள் அவள் தான் என்னை காதலிப்பதாக சொல்லி ஒரு குண்டை தூக்கி போட்டாள்.. எனக்கு அவளுக்கு என்ன சொல்வது என்றே புரிய வில்லை.அப்போ எனக்கு தெரியவும் இல்லை இவள் தான் என் வாழ்க்கை ஐ தலைகீழா மாற்ற பொற்றாள் என ..
அடுத்த பதிவில் காதல் எனக்கு தந்த வலிகள் , சந்தோசங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளகிறேன் .
உங்கள் கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Friday, September 18, 2009

காதலா.. அப்டின்னா....? - Part - 02

வணக்கம் உறவுகளே...
மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

இதற்கு முந்திய பதிவில் ,என் வாழ்வில் வந்த் இரண்டாம் அவள் அனுப்பிய மின்னஞ்சலின் ஒரு பகுதியை தந்து இருந்தேன்..அதில் அவள் எங்களுக்குள் இருக்கும் உறவு என்ன என்று கேட்டு எழுதி இருந்தாள்..அதை வாசித்த அனைவரிற்கும் புரிந்து இருக்கும்,அவள் என்னை காதலித்ததும் அதை தான் சொல்ல தயங்கியதும்..என்னை தான் முதலில் காதலை வெளிப்படுதணும் என்றும் ஏழுதி இருந்தாள்.ஆனால் நானும் அவளுடய கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல இல்லை.எனக்கு அந்த நேரம் அவளுடைய உறவு தேவைப்பட்டது..எனக்கு காதல் என்று சொல்ல எல்லாம் பயம்..என்னை பொறுத்த வரை அப்போ காதல் என்று ஒரு பெண்ணிடம் சொன்னால் , எந்த எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்க கூடாது .அதனால் நன அவளிடம் கெட்டு அன்ப்பினேன் எங்களுக்குள் இருக்கும் உறவு காதல் என்றால் அது வெற்றி பெறுமா என்ன அதுக்கு அவள் அனுப்பிய மினன்ஞ்சலை படியுங்கள்
"ok, நீங்க கேட்ட கேள்விக்கு வருகிறேன், அதாவது எங்க relationship love என்றால் அது success ஆகும? ம்ம்ம்ம்... இருவரும் உண்மாயான lovers என்றால், ஒருத்தர் மேல் ஒருத்தர் உண்மையான அன்பு, பாசம் இருந்தால் நிச்சயமா அது வெற்றி பெறும்... அது நம்ம கையில் தான் இருக்குது. நீங்க distance பற்றி யோசிக்குறீங்க என்று நினைக்குறேன், உண்மயான love இட்கு "டிஸ்டன்கே" உண்டா? "சொ" நம்பிக்கை இருந்தால் முடியும். நீங்க என்ன நினைக்குறீங்க?" அ க்வெஸ்டியோன்:" உங்கட அம்மா, அப்பா நீங்க அப்படி ஏதாவது "லொவே" பண்ணினால் சம்மதிப்பினமா? கல்யாணம் பண்ணி வைப்பினமா?"

என்னை அவள் உயிராய் காதலிப்பது போலல்லவா இருக்கு..ம்ம்.. நான் அவளின் எந்த கேள்விக்குமே நேரடியாக பதில் அளித்தது கிடையாது.(என்னில் ஒரு பழக்கம் இருக்கிறது எதையும் சொல்ல அல்லது செய்ய முதல் நன்றாக யோசித்து விட்டே செய்வேன்.)

காதல் என்று இல்லாமல் எமக்குள் இருந்த உறவு அப்படியே தொடர்ந்தது.ஒரு சில மாதங்களிற்க்கு பிறகு அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்த்தது..அதை வாசித்த போது நான் இடிந்து போனேன்.அதில் அவள் தனக்கு வீட்டில் மாப்பிளை பார்த்துட்டார்களாம்,தனக்கு தெரியாமலே எல்லாம் நடந்துட்டுதாம்..அதனால் தன்னால் இனி எதுவும் செய்ய முடியாது என்று எழுதி இருந்தாள்..எனக்கோ எதுவுமே புரியல..அவளையும் என்னால் புரிந்து கொள்ளவே முடியல.இருந்தாலும் அவள் எனக்கு தந்த வலி நீண்ட நாட்கள் இருக்கல.


அவளின் பிரிவின் பின்னர் சில காலம் கடந்த பின் என் வாழ்க்கையில் அடுத்த பெண் வந்தாள்..என்னுடைய நண்பனிற்கு உறவினர் அவள்.அவளின் பெயரை "சுதா" என்று வைத்து கொள்வோம்.சுதா அழகானவள் பயந்த சுபாவம் உள்ள ஒரு பெண்..ப்ழைய கதை போலவே இவளுடனும் நாட்கள் செல்ல செல்ல எமக்குள் இருந்த உறவின் நெருக்கம் இறுக்கமானது.எமது நெருக்கம் உடல் உறவு பற்றி கதைப்பது.கதைப்பதன் மூலமே ஒருவர் ஒருவரை திருப்தி படுத்தி கொள்வதும் ஆக போய்க் கொண்டிருந்தது.ஆனால் இருவரும் ஒரு விடயத்தில் தெளிவாக இருந்தோம் அதாவது நாங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் பிரிந்தே ஆகணும் என்று.ஏனேனில் சாதி ..!! இருந்தாலும் நாங்கள் அதற்காக எமக்குள் இருந்த நெருக்கத்தை , அன்பை குறைததும் இல்லை.எனக்கு அவளில் ஒரு தனி மரியாதை இருந்தது.இப்போ கூட இருக்கிறது.அவளுக்கு முதல் முதல் கிடைத்த நண்பன் நான்.அவளுடைய பயந்த சுபாவம் ,அடக்கம் என்பன எனக்கு அவள் மேல் இருந்த அதிக அன்புக்கு காரணமாயின.அவளும் என் மேல் அன்பு வைத்து இருந்தாள்.நாங்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்த போதிலும் நாங்கள் ஒரு சில நிமிடங்கள் தனிமையில் இருந்து இருக்கோம்..ம்ம் எனக்கு இப்பவும் நினைவு இருக்கிறது..நாம் இருவரும் முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் கடற்கரைக்கு சென்றொம்.அங்கு வைத்தே நான் முதல் முதல் அவளுக்கு முத்தம் கொடுத்தேன்..அதுதான் நான் வாழ்கையில் நான் கொடுத்த முதல் முத்தம் ஒரு பெண்ணிற்கு.

உறவுகளே இப்போ நேரம் அதிகாலை இரண்டு மணி ஆகிறது..நாளை வேலைக்கும் போயாகணும்..அதனால் இப்போ இத்துடன் நிறுத்தி மீதி அய் நாளை தொடர்கிறேன்.
நன்றி

தடங்கலுக்கு வருந்துகிறேன்

அன்பு உள்ளங்களே ..
நீண்ட நாட்களாக வாழ்க்கையில் ஏற்ப்பட்ட தவிர்க்க முடியாத மாற்றங்கள்,வேலை சுமைகள் இனால் பதிவிட முடியவில்லை .அதற்க்காக மனம் வருந்துகிறோம்.மீண்டும் உங்களை மறு பதிவில் சந்திக்கிறேன்.

குடிக்காரன்

Wednesday, June 24, 2009

காதலா.. அப்டின்னா....? - Part - 01

நண்பர்களே வணக்கம்..
குடிகாரன் போதையில் எழுதும் பதிவு இது..
உண்மையாகவே போதை இல் இருக்கேன்..
நான் இந்த தளதில் முதல் பதிவு எழுதும் போதே நினைத்து இருந்தேன் ,இரண்டாவது பதிவு தகவல் தொழில் நுட்பததை பற்றி சார்ந்ததாகவே எழுத வேண்டும் என..ஆனால் என் மனதில் வேறு ஒரு விடயம் உறுத்திக் கொண்டு இருக்கிறது,,அது என்ன..வேறு ஒன்றும் இல்லை,, " காதல் " தான்..

பாழாப்போன காதலை பண்ணித்துலைத்து என் சந்தோசங்ககளை எல்லாம் துலைத்து விட்டு இன்று தவிக்கிறேன்..காதலே என் வாழ்வில் பண்ணகூடாது என்று முடிவு எடுத்து வாழ்ந்தவன் நான்..ஆனால் என் வாழ்விலும் ஒருதி வந்து ,என் முடிவுகளை எல்லாம் மாற்றி விட்டு எனக்கு இன்று வேதனைகளையும் வலிகளையும் மட்டும் தந்து கொண்டு இருக்கிறாள்..

நான் ஏதோ நல்லவன் என்று நான் சொல்லவில்லை..உலகதில் உள்ள எல்லா கெட்ட பழக்க வழக்கங்க்களும் என்னிடம் இருப்பது ஏதோ உண்மை தான்..ஆனால் நான் யாருக்கும் துரோகாம் செய்தது இல்லை..அதனால் தான் நான் இன்று வேதனைகளையும் வலிகளையும் அனுபவித்து கொண்டு இருக்கேன்..சரககை(பெண்ணை) மடகினோமா,அலுவலை முடித்தோமா அடுத்த சரக்கை தேட தோடங்கினோமா என்று வாழும் இந்த காலத்தில் நான் ,உண்மைக்காதல்,கத்தரிக்காய் என நம்பினது என் தப்பு தான்..ஏன் இப்ப கூட நண்பர்களே,என்னால் இப்ப கூட அவளை அப்படி எமாற்ற முடியும்..ஆனாலும் என் பாழ்பட்ட மனசு அதுக்கு இடம் தருகிறதே இல்லை.

நண்பர்களே..என் சோகத்தை சொல்ல முதல் என்னைப்பற்றி நான் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்கிறேன்..சிலருக்கு இது கொஞ்சம் ஆபாசமாக கூட தோன்றலாம்..தயவு செய்து அப்படி நினைக்காதீர்கள்..இந்த குடிகாரன் உண்மை யை சொல்ல ,வெளிப்படையாக கதைக்க கொஞ்சம் அனுமதி தாங்களேன்..
நானும் சாதாரண ஒரு பையன் தான்..எனக்கும் பெண்களுடன் கதைக்க வேண்டும் எல்லாம் அனுபவிக்க வேண்டும்..சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைத்து வாழ்ந்தேன்..இருந்தாலும் எனக்குள் சில கொள்கைகளை வகுத்து இருந்தேன்..அதாவது எந்த பெண்ணையும் காதல் என்று சொல்லி ஏமாற்ற கூடாது,அப்படி எவளையும் விரும்பினால் உயிரே போனாலும் அவளை கைவிடக்கூடாது..இப்படி கொள்கைகள் இருந்தாலும் யாரையும் விரும்ப கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்..என்னை பெரிய மன்மதன் என்று மட்டும் நினைத்து விட்டாதீர்கள்..நான் ஒரு கேவலம் ஆனவன்,,எந்த பெண்ணும் எனை திரும்பி கூட பார்க்க மாட்டாள்..அழகு என்பதற்கும் எனகும் எந்தவித தொடர்பும் இல்லை..அசிங்கம் என்றால் அதற்கு உதாரண புருஸனாக நானே இருப்பேன்.
இப்படிப்பட்ட என் வாழ்வில் நிறைய பெண்கள்..என் பருவ வயது காதல்களை விட்டு விடுங்க்கள்...அது பற்றி என்ன தான் சொல்வது..நான் சில பெண்களை விரும்பினாலும் யருக்கும் என்னை பிடிக்கவே இல்லை.
நான் 21 வயது கடந்த பின் முதலாவது பெண்ணுடன் தொடர்பு வந்தது..அது என்னால் மறக்க முடியாத உறவு..அந்த தொடர்பு நடபா மட்டுமே இருக்கணும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்..அந்த பெண் கடல் கடந்த தேசதிற்கு போனபின்,ஒருவருடத்திற்கு எங்கழுகுள் எந்த தொடர்பும் இருக்கவில்லை.ஆனாலும் என் இடைவிடாத முயற்சியினால் மிண்டும் அந்த பெண்ணுடன் தொடர்பு கிடைதது..ஆனால் அப்போ அவள் வேறு ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த்தாள்.இருந்தாலும் நான் அவளுடன் நட்பை பேணவிரும்பினேன்..அவளை என்னால் மறக்கவே முடியாது..ஏன் எனில் முதல் முத்தம் மறக்க முடியாது இல்லை யா..ம்ம் ..அவள் தான் எனக்கு முதல் முதல் தொலை பேசியில் முத்தம் தந்தவள்..அவளுடன் நான் கொஞ்சம் எல்லை மீறியும் கதைத்து என் ஆசைகளை நிறைவேற்றி இருகேன்,,எனக்கு பெண்மை பற்றி புரிய வைத்தவள் அவள் தான்.இருந்தாலும் என் மூச்சு காற்று கூட அவள் மேல் பட்டதில்லை..அவள் வேறு ஒருவனுக்கு நிச்சயிக்க பட்டது தெரிந்ததும் நான் அவளுடன் சாதாரண நட்புறவையே பேண்ணினேன்..இன்று வரை என்னை புரிந்த நல்ல நண்பி ஆக அவள் இருக்காள்.நானும் அவளுக்கு எதையும் சொல்லாமல் மறைதது இல்லை,,என்னுடைய கவலைகளுக்கு எல்லாம் அவள் தான் இன்று வடிகாலாக இருகிறாள்.

இப்படி நான் இருக்கும் போதே இரண்டாம் அவளின் தொடர்பு இணையத்தள அரட்டை மூலம் கிடைத்து.அவளும் கடல் கடந்த்த நாடொன்றிலையே இருந்தாள்.அறிமுகமாகி நாட்கள் செல்ல செல்ல எங்களுக்குள் இடையேயான தொடர்பும் நெருக்காமாகி கொண்டே போனது..ஒவ்வொரு நாள் காலையிலும் 2,3 பக்க மினஞ்சல் எனகாக காத்து இருக்கும் , என்னுடைய பதில் மின்னஞ்சலும் அவ்வாறே இருக்கும்.இதை விட ஓரிரு மணிதியால நேரடி அரட்டை வேறு..இப்படி கதைத்து எங்கள் கற்பனை உடல் உறவு வரைக்கும் வந்தது.கற்பனை உடல் உறவு என்று தெரியாதொருக்கு ஒரு சிறு விளக்கம்..அதாவது நாங்கள் இருவரும் நேரடியாக உடல் உறவு கொள்வதாக நினைத்துக்கொண்டு கதைப்பது..அப்படி யாக கதைத்து கொண்டு நாட்கள் செல்லும் போது அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது எங்களுக்குள் இருக்கும் தொடர்பை எப்படி சொல்வது என..அதற்கு அவள் கூறி அன்ப்பிய மினஞ்சல் பகுதியை அப்படியே தருகிறேன்...வாசியுங்கள்..

"இது ரொம்ப யோசிக்கவேண்டிய விஷயம் இல்லையா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை... உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும், "You are very special to me", ஏனக்கு இது ஃப்ரிஎண்ட்ஸ் ஐ விட ஒரு படி மேல ஏன்று தொணுது, ஃப்ரிஎண்ட்ஷிப் க்கு ஒரு படி மேல இருக்கும் relationship காதல் ஆ? எங்கட வயதில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் இந்த மாதிரி பேசி, பழகினால் அதுக்கு ஏன்ன கருத்து? அது "ஃப்ரிஎண்ட்ஷிப்" என்ரு சொல்வத, "காதல்" என்ரு சொல்வத? நான் சுத்தி வழைத்து ஒரு மாதிரி சொல்லிவிட்டேன்...உங்கழுக்கு விழங்கி இருக்கும் என்று நினய்க்கிறேன்... Its up to you now . நீங்க தான் ஆம்பிள தைரியமா சொல்லணும் ஏதுவா இருந்தாலும்...

"

நீங்க என்ன நினைக்கிறீங்க நட்பா காதலா ......................அல்லது காமம் எங்கீறீங்களா..
ஏதாவது சொல்லுங்களேன்.. தயவு செய்து உங்க கருத்தை comments இல் பதிவு செய்துட்டு போங்க

நான் மீதி யை அடுத்த பதிவில் ஆதாரங்களுடன் உங்களை சந்திகிறேன்..உங்க கருதுக்களுக்காக காத்து இருகேன்..

kudikaaran

Monday, June 22, 2009

வேண்ட தகாத சம்பவங்கள்..

நண்பர்களே,
"குடி காரன் பேச்சு விடிந்தால் போச்சு என்று சொல்வார்கள்" அதில் உண்மை இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அது தான் முடிவாகாது.
.ஒருவன் போதை இல் இருக்கும் போது தான் அவன் இதயம் பேசும்.சரி சரி குடிகாரருக்கு இவ்வளவு பில்ட் அப் தேவை தானா என்று கேட்பது புரிகிறது..

நேற்று உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின,போட்டியை பார்க்க வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை.நணபர்கள் எல்லோரும் க்கு அதே பிரச்சனை..அதனால் எல்லோரும் சேர்ந்து முடி வெடுத்தோம் ரேஸ்டோறன்ற் இற்கு போவது என.அங்குபொனால் குடித்ததும் ஆகுது போட்டி அய் பார்ததும் ஆகுது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..ஆனால் அன்று எல்லா ரெஸ்டொரன்ற்ம் குடி மக்களால் நிரம்பி இருந்தது.வடிவாக போட்டியை ரசிக்க கூடிய மாதிரி ஒரு ரெஸ்டொறன்ற் அய் தேடிப்பிடிக்க போட்டி ஆரம்பமாகி விட்டது..

இலங்கை அணியின் விக்கற்றுக்கள் மழ மழ என சரிய தொடங்கின,சிலருக்கு சந்தோசம் சிலருக்கு கவலை.இலங்கை அணி தனது முக்கியமான விக்கற்றுக்களை முதலில் பற் கொடுத்து விட்டது.குறிப்பாக டில்ஸான் இன் மிக சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்தது தான் இலங்கை அணியின் ஓட்ட வீதததை பாதிதது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.ஒரு புறம் சங்கக்கார தன் பொறுப்பு உணர்ந்து விளையாட மறுபக்கதில் விக்கற்றுக்கள் சரிந்து கொண்டு இருந்தன.ஜெயவர்தன மிக குறைந்த ஒட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது சில நணபர்களின் கடுப்பை கூட்டியது.அவர்களுடைய கருத்து ஜெயவர்தன வேண்டும் என்றே ஆட்டம் இழ்ந்ததாகவும்.அவர் சங்கா வின் தலமை இல் இலங்கை அணி உலகக்கிண்ணம் வெல்வதை அவர் விரும்பவில்லை என்பது அவர்களின் விவாதமாக இருந்தது..நீங்க என்ன நினைகிறீங்க?

ஒருமாதிரி இலங்கை அணி தடுதடுமாறி சங்கா வின் துணையோடு 138 என்ற இலக்கை நிர்ணயித்தது,பாகிஸ்தான் அணியின் ஆரம்ப ஆட்டமே இலங்கை அணியின் உலகக்கிண்ண கனவை குறைத்து விட்டது.
கம்றன் அக்மால் ஆட்டம் இழந்ததும் வந்த அஃப்ரிடி யின் நிதான் ஆட்டம் பாகிஸ்தானுக்கு உலகக்கிண்ணததை இலகு வாக்கியது..பாகிஸ்தான் உலகக்கிண்ணதை கைப்பற்றியதும் நண்பர் ஒருவர் சொன்னார்,அப்பாடா.. வெடி சத்தங்கள் கேட்காது என..உண்மை தான் தலை நகர தமிழ் மக்கள் ரொம்பவே பாதிக்க பட்டுடார்கள்..

அடுத்த நாள் காலமை தான் அந்த துயர செய்தி தெரிந்தது..அதாவது நேற்று வெள்ளவதை இல் இரு குழுக்குள் நடந்த மோதலில் இரண்டு இழம் உயிர்கள் பலி...ஏற்கனவே எதனையோ இழப்புகளை சந்த்துது துவண்டு போயிருக்கிறது தமிழ் இனம்..அதற்குள் இப்படியானதும் தேவை தானா,,
ஏன் இந்த கொலை வெறி..ஏதற்காக சண்டை..இப்படி வீரம் செறிந்த இளையர்கள் தமிழ் மண்ணிற்காக உயிரை கொடுது இருந்தால்..ஏன் இந்த நிலை..
குடி யால் தான் வந்தது என்று நீங்க சொல்லாம்..எந்த போதையிலும் ஒரு கொலை செய்ய சாதாரண ஒருவரால் முடியாது என்றே சொல்லலாம்.. அந்த இரண்டு உயிர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பதின் வேதனை..இழப்பு ஒரு பக்கம், அதுவும் குழு சண்டை இல் , போதை இல் என்றால் அவர் களின் வலி ..உண்மை ஆகவே சொல்லில் அடங்காது...
ஆந்த உயிர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறென்..
அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கு இப்போ எல்லாம் புரிந்து இருக்கும்..அவர்களின் ஒவ்வொரு நிமிடமும் பயத்துடனே யே கழியும் என்பதில் சந்தேகம் இலலை..
இனியாவது நண்பர்களே இப்படியான வேண்டதாகத சம்பவங்கள் இடம் பெறாமல் தவிர்த்து நடப்போம்...
எம் உறவுகள் முகாம் களில் படும் கஸ்டங்களை கொஞ்சம் ஆவது புரிந்து நடப்பொம்..

எதுவும் எல்லை மீறினால் அது வீண் விபரிதமாகவே முடியும்..

நான் இவற்றை பற்றி கதைக்க தகுதி இல்லாதவன் தான்..மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது சுலபம் தான்..
இருந்தாலும் நான் சொல்வென்...

நன்றி
Reblog this post [with Zemanta]